தமிழ்நாடு

மு.க.ஸ்டாலின் உடன் தலைமைச் செயலாளர் சந்திப்பு: கொரோனா குறித்து ஆலோசனையா?

Published

on

நடைபெற்ற முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று உள்ளதை அடுத்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் இன்னும் ஒரு சில நாட்களில் தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளார். தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி சற்றுமுன் ராஜினாமா செய்துள்ள நிலையில் இன்று அல்லது நாளை தமிழக கவர்னர் ஸ்டாலினை ஆட்சி அமைக்க அழைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக முதல்வராக பதவி ஏற்க இருக்கும் ஸ்டாலினை அரசு உயர் அதிகாரிகள் சந்தித்து வருகின்றனர். சற்று முன்னர் முதலமைச்சராக பதவியேற்க உள்ள முக ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன் அவர்கள் சந்தித்தார். அவருடன் காவல்துறை டிஜிபி திரிபாதி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் இருந்தனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முக ஸ்டாலின் அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார் என்றும் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் ஆலோசனை கூறியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவிக் கொண்டிருக்கிறது என்பதும் நேற்று கூட தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஊரடங்கு உட்பட அதிரடி நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஸ்டாலின் ஆலோசனை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இன்னொரு ஊரடங்கை தமிழகம் தாங்காது என்று ஏற்கனவே ஸ்டாலின் கூறியுள்ளதால் ஊரடங்கை தவிர்த்து மற்ற நடவடிக்கைகளை அவர் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version