இந்தியா

மோசமான முதல்வர்கள் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி..!

Published

on

ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் மற்றும் சி.வோட்டர் நிறுவனமும் இணைந்து இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் மற்றும் மோசமான முதல்வர்கள் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டன.

இந்தியாவின் 23 மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், சிறந்த முதல்வராக ஒடிசா முதல்வர் நவின் பட்நாயக் முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிர்வால் இடம்பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தை ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பிடித்துள்ளார்.

நாட்டில் சிறப்பாகச் செயல்பட்ட முதல்வர்கள் பட்டியலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 19வது இடம் கிடைத்துள்ளது. அதற்கு நேர் எதிராக மோசமான முதல்வர்கள் பட்டியலில் எடப்பாடி பழனிசாமிக்கு 5வது இடம் கிடைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற கருத்துக்கணிப்பில் 30 சதவீதத்தினர் மட்டுமே எடப்பாடி பழனிசாமி செயல்பாட்டில் திருப்தி தெரிவித்துள்ளனர்.

டாப் 10 சிறந்த முதல்வர்கள் பட்டியலில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 7 நபர்கள் உள்ளனர். மோசமான 10 முதல்வர்கள் பட்டியலில், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த முதல்வர்கள் 7 இடங்களைப் பிடித்துள்ளனர்.

தேசிய கட்சிகளுடன் ஒப்பிடும் போது மாநிலக் கட்சியைச் சேர்ந்த முதல்வர்கள் செயல்பாடு நன்றாக உள்ளதாகக் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

விரைவில் தேர்தல் நடைபெற உள்ள கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் தற்போது உள்ள முதல்வர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதல்வர்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

மோசமான முதல்வர்கள் பட்டியலில் உத்தரகண்ட் முதல்வர்கள் பட்டியலில் திரிவேந்திர சிங் ராவத் முதல் இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் மற்றும் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உள்ளிட்டவர்கள் மோசமான முதல்வர்களாக உள்ளனர்.

சிறந்த முதல்வர்கள் பட்டியலில், 11 மாநில முதல்வர்கள் தேசிய சராசரியை விட அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர், மேற்கு வஙம் மற்றும் மகாராஷ்டிரா முதல்வர்கள் தேசிய சராசரியை விட அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

மோசமான முதல்வர்கள் பட்டியலில் முதல் 3 இடத்தை பாஜக முதல்வர்கள் பிடித்துள்ளனர். சிறந்த முதல்வர்கள் பட்டியலில் முதல் 3 இடத்தை பாஜக அல்லாத மாநிலக் கட்சி முதல்வர்கள் உள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version