இந்தியா

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: இந்திய விமானப்படை முக்கிய அறிவிப்பு!

Published

on

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து இந்திய விமானப்படை தனது டுவிட்டர் பக்கத்தில் முக்கிய தகவல் ஒன்றை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

குன்னூர் அருகே காட்டேரி என்ற இடத்தில் நேற்று முன்தினம் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உள்பட 13 பேர் பலியாகினர் என்பதும் கேப்டன் வருண்சிங் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பலியான வீரர்களின் உடல்கள் இன்று முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த விமான விபத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றது என்பதும் இதுகுறித்து ஒரு சிலரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்திய விமானப்படை தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்த முக்கிய தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை நடத்தப்பட்டு உண்மையை வெளிக்கொண்டு வரப்படும் என்றும் அதுவரை யூகமான கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்கவும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Trending

Exit mobile version