தமிழ்நாடு

டிக் டாக்கை தடை பண்ணுங்க.. தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை!

Published

on

சென்னை: டிக் டாக் தடை செய்யப்பட்டால் மகிழும் முதல் நபர் தான்தான் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இந்த தமிழக சட்டசபையில் சுவாரசியமான கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டது. டிக் டாக் ஆப் தமிழக கலாச்சாரத்திற்கு எதிராக இருக்கிறது. இதில் பல தவறான வீடியோக்கள் வலம் வருகிறது. இதனால் இதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த நாகப்பட்டினம் எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி கோரிக்கை வைத்தார்.

இதற்கு, டிக் டாக் ஆப் மீது கண்டிப்பாக தடை விதிக்கப்படும். இதற்காக மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது என்று தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார். தற்போது இதுகுறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், டிக் டாக் தடை செய்யப்பட்டால் மகிழும் முதல் நபர் நான்தான். அதை கண்டிப்பாக நான் வரவேற்பேன். டிக் டாக்கீழ் தேவையில்லாமல் பலரை கிண்டல் செய்கிறார்கள்.

எங்களை போன்ற அரசியல்வாதிகளை, பிரபலங்களை இந்த ஆப் மூலம் கிண்டல் செய்கிறார்கள். இதனால் அந்த ஆப்பிற்கு தடை விதிப்பது சரியான முடிவாகவே இருக்கும்.

லோக்சபாவில் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நாளை மறுநாள் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தமிழகம் வருகிறார். இதில் பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்க இருக்கிறோம்.

seithichurul

Trending

Exit mobile version