தமிழ்நாடு

மோடி எப்போது வந்தாலும் கருப்புக் கொடி உறுதி: வைகோ அதிரடி அறிவிப்பு!

Published

on

பிரதமர் நரேந்திர மோடி எப்போது தமிழகம் வந்தாலும் என்னுடைய தலைமையில் கருப்புக் கொடி காட்டப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

கடந்த முறை பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது அவருக்கு தமிழகத்தில் கருப்புக்கொடி காட்டப்பட்டது. அவரது வருகையை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. ராட்ச கருப்பு பலூனில் மோடி திரும்பி போ என ஆங்கிலத்தில் கோ பேக் மோடி என்ற வாசகத்துடன் எழுதி பறக்கவிடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் டுவிட்டரில் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி உலக முழுவதும் இதனை தெரியப்படுத்தினர்.

இது பாஜகவினரும் பெரும் பின்னடைவை தமிழகத்தில் ஏற்படுத்தியது. அதன் பின்னர் பிரதமர் மோடி தமிழகத்துக்கு இதுவரை வரவில்லை. இந்நிலையில் பிரதமர் மோடி மீண்டும் எப்போது தமிழகம் வந்தாலும் அவருக்கு கருப்புக் கொடி காட்டப்படும் என வைகோ அறிவித்துள்ளார்.

மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து பேசிவிட்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள பொதுபிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து பேசினார். அப்போது, சமூகநீதிக்கு அஸ்திவாரம் அமைத்தது தமிழ்நாடு. மூன்று மாநிலங்களில் படுதோல்வி அடைந்த பாஜக அந்த மாநிலத்தில் குறிப்பிட்ட வேறு வகுப்பு பிரிவினரின் ஓட்டுகளை பெறுவதற்கு வேண்டி இந்த திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளனர்.

இதனை சில கட்சிகள் வரவேற்று உள்ளனர். அதை விமர்சிக்க விரும்பவில்லை. இதனுடைய தொட்டில் பூமி தமிழ்நாடு. இந்த சமூக நீதியை கொண்டுவந்தது தமிழ்நாடு. எனவே கடைசியாக ஆட்சியை இழந்து போகிற போக்கில் இந்த நரேந்திர மோடி அரசு எப்படி எல்லாம் வஞ்சகம் செய்யலாம் என்பதை என்று பார்க்கிறது. தமிழ்நாட்டிற்கு மோடி என்று வந்தாலும் என் தலைமையில் கருப்பு கொடி காட்டப்படும் என்றார் ஆவேசமாக வைகோ.

seithichurul

Trending

Exit mobile version