தமிழ்நாடு

‘பட்டின பிரவேசம்’ நிகழ்ச்சியை நடத்தி காட்ட தயார்: அண்ணாமலை சவால்

Published

on

தர்மபுரி ஆதினத்தின் ‘பட்டின பிரவேசம்’ நிகழ்ச்சியை நடத்தி காட்ட தயார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சவால் விட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தருமபுர ஆதீனம் அவர்களை தமிழக கவர்னர் ரவி சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு திடீரென தர்மபுர ஆதீனம் கோவிலில் நடைபெறும் ‘பட்டின பிரவேசம்’ நிகழ்ச்சிக்கு தடை என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது .

இந்த தடைக்கு மதுரை ஆதினம் உள்பட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் ‘பட்டின பிரவேசம்’ நிகழ்ச்சியை நடத்திக் காட்ட தயார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

தருமபுர ஆதீனத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான ‘பட்டின பிரவேசம்’ மீதான தடை தமிழக நாகரிகம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது.

ஆதினத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதைத் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்! இந்த சட்டவிரோத உத்தரவை எதிர்த்து நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்குமாறு ஆதினத்திடம் கோரிக்கை வைப்போம்.

கோபாலபுர குடும்பத்தை அவரது கட்சியினர் தூக்கிச் சுமப்பதை போல் அல்ல இது. ஊழியம் மற்றும் குருவுக்குச் செய்யும் சேவையின் உள்ள வேறுபாடுகளைக் கூட அறியாதவர் இந்த கோபாலபுர குடும்பத்தார். தமிழக பாஜக இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்ட தயாராக இருக்கிறது!

இந்த நிலையில் தருமபுரி ஆதீனத்தில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி குறித்து அரசுடன் பேசி முடிவு எடுக்கப்படும் என்றும் இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய பார்க்கிறார்கள் என்றும் இது குறித்து தமிழக முதல்வர் முடிவு செய்வார் என்றும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version