உலகம்

2014ல் மோடி அளித்த வாக்குறுதியை 2019க்காக கையில் எடுத்த நிதின் கட்கரி!

Published

on

டெல்லி: 2019 மார்ச் மாதத்திற்குள் கங்கை நதியை 80 சதவிகிதம் சுத்தம் செய்துவிடுவோம் என்று பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

2014 லோக் சபா தேர்தலில் பாஜக நிறைய முக்கியமான வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு தேர்தலில் வெற்றிபெற்றது. மோடி கொடுத்த முக்கியமான வாக்குறுதிகளில் கருப்பு பணத்தை மீட்பது, ராமர் கோவில் கட்டுவது மற்றும் கங்கையை சுத்தம் செய்வது முக்கிய பங்கு வகித்தது.

ஆனால் இந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. முக்கியமாக கங்கை நதியை சுத்தம் செய்வதில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இது பக்தர்களை, இந்து மத துறவிகளை பெரிய அளவில் ஏமாற்றத்திற்கு உள்ளாகியது. இதுவரை ஒரு சதவிகிதம் கூட கங்கை நதி சுத்தம் செய்யப்படவில்லை. மத்திய அரசின் இந்த செயலை பார்த்து தேசிய பசுமை தீர்ப்பாயம் கூட மத்திய அரசு கங்கை நதியை சுத்தம் செய்யாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

seithichurul

Trending

Exit mobile version