தமிழ்நாடு

குஷ்புவுக்கு ஆதரவாக பிரச்சாரம்: 80s கதாநாயகன் அதிரடி அறிவிப்பு

Published

on

நடிகை குஷ்பு பாஜக வேட்பாளராக சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என எண்பதுகளின் கதாநாயகன் தெரிவித்துள்ளார்.

பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி 80 மற்றும் 90களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகர் கார்த்திக். இவர் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த சில வருடங்களாக அரசியலில் இருக்கும் நடிகர் கார்த்திக் சமீபத்தில் மனித உரிமை கட்சி என்ற கட்சியை ஆரம்பித்தார். அந்த கட்சி பாஜகவுடன் இணைந்து கூட்டணி வைத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி கொடுத்தால் அதை ஏற்றுக் கொள்வேன் என்றும் மக்களுக்காக ராஜ்யசபாவில் குரல் கொடுப்பேன் என்றும் அவர் தெரிவித்தார். கூட்டணி கட்சி என்ற முறையில் நடிகை குஷ்பூ போட்டியிடும் ஆயிரம் விளக்கு தொகுதியில் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என்றும் அவரது வெற்றிக்காக பாடுபடுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version