சினிமா

அஜித்துடனும் நடிப்பேன்: ஹன்சிகா அசத்தல் பேட்டி!

Published

on

நடிகை நயன்தாராவை தொடர்ந்து, ஜோதிகா, த்ரிஷா, சமந்தா என பல நடிகைகள் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளனர்.

இந்த வரிசையில், தனது 50வது படத்தை தானே தாங்கி நடிக்க ஹன்சிகாவும் முடிவு செய்துள்ளார். அப்படத்திற்கு மஹா எனப் பெயரிடப்பட்டு படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், விஜய், சூர்யா, ஜெயம்ரவி, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ள ஹன்சிகாவுக்கு தல அஜித்துடன் நடிக்க முடியாதது பெரிய வருத்தமாக உள்ளதாம்.

இதுபற்றி கூறும்போது ‘அஜித்தை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் நடிக்கும் வாய்ப்புக்காககாத்திருக்கிறேன். எனக்கு கனவு வேடம் என்று எதுவும் இல்லை. எல்லா கதாபாத்திரங்களிலுமே நடிக்கத்தான் விரும்புகிறேன். நான் நடித்ததிலேயே மிகவும் பிடித்த கதாபாத்திரம் ரோமியோ ஜுலியட் படகதாபாத்திரம்.

காரணம் அந்த கதாபாத்திரத்தில் நெகட்டிவான குணாதிசயம் கலந்து இருக்கும். இந்த வேடத்தில் நடிக்கவேண்டாம் என்று சிலர் கூறினார்கள். ஆனால் நான் அதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டேன். அந்த படம்எனக்கு நல்ல பெயர் வாங்கித்தந்தது. என் மனதுக்கு நெருக்கமான படம் அது’ என்று கூறியுள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version