தமிழ்நாடு

“234 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டி..!’- ஈவிகேஎஸ் இளங்கோவன் கொடுத்த ஷாக்

Published

on

2021 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என்கிற விருப்பம் தனக்கு இருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்..

தற்போது காங்கிரஸ், தமிழக எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணியில் இருக்கிறது. எதிர்வரும் தேர்தலிலும் திமுக கூட்டணியிலேயே காங்கிரஸ் இருக்கும் என்று அக்கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சில நாட்களுக்கு முன்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் இளங்கோவன், ‘திமுக கூட்டணியில் இருக்கும் ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு எத்தனை தொகுதிகள் வேண்டும் என்பதைக் கேட்பார்கள். அதில் தங்களுக்கு எவ்வளவு விருப்பமோ அவ்வளவு கேட்பார்கள். ஆனால் நடைமுறையில் என்ன சாத்தியம் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். எனக்கும் ஆசைதான். காங்கிரஸ் மாநிலத்தில் இருக்கும் 234 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என்று. ஆனால், நடைமுறையில் அது சாத்தியப்படாது. திமுகவுடன் எங்களுக்கு எவ்வளவு தொகுதிகள் வேண்டும் என்பதை சுமுகமாக பேசி முடிவெடுப்போம்’ என்று கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version