சினிமா செய்திகள்

தம்மாத்துண்டு எலிதானேன்னு நினைச்சேன் – தெறிக்கவிடும் மான்ஸ்டர் டீஸர்!

Published

on

ஒரு நாள் கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள மான்ஸ்டர் படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் மான்ஸ்டர் என்பது தம்மாத்துண்டு எலிதான். ஆனால், அது செய்யும் அட்டகாசங்களும், அந்த எலிக்கு பயந்து எஸ்.ஜே.செய்யும் ரகளைகளுமாய் படம் உருவாகியுள்ளது.

சுந்தரா டிராவல்ஸ் படத்தில் வடிவேலுவுக்கும் எலிக்குமான காமெடி போர்ஷன் இன்றளவும் ஆதித்யா டிவி போன்ற நகைச்சுவை சேனல்களில் அனைவரையும் சிரிக்க வைத்து வருகின்றன.

இந்நிலையில் படம் முழுக்கவே ஒரு எலியின் அட்டகாசம் இருந்தால் எப்படி இருக்கும் என டீஸரிலேயே நெல்சன் வெங்கடேசன் கலக்கியுள்ளார்.

மேயாத மான் படத்திற்கு பிறகு பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார். அவர் வரும் சீன்களும் ரசிக்கும் படியாக டீசரில் உள்ளது.

எஸ்.ஜே.சூர்யாவுடன் கருணாகரன் காமெடியில் கலக்கியுள்ளார். வரும் மே 17ம் தேதி கோடை கொண்டாட்டமாக இந்த படம் திரைக்கு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version