தமிழ்நாடு

விவாதம் பண்றாங்க.. என் நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன்.. அண்ணாமலை உறுதி

Published

on

சென்னை: என் நிலைப்பாட்டில் நான் உறுதியாக உள்ளேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் .

அதிமுக பாஜக கூட்டணி இனி வேண்டாம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று முதல் நாள் நடந்த பாஜக கூட்டத்தில் பேசி இருக்கிறார். இதில் பேசிய அண்ணாமலை, திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. அது எங்களுக்கு அவசியம் இல்லை.

தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை. கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன். கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன், என்று உள்ளார்.

இந்த பேச்சு குறித்து தற்போது அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். அதில். கட்சிக்குள் நான் பேசியதாக கூறப்படும் கருத்துகள் ஒரு விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது, அது நல்லது தான் தேர்தலை சந்திக்கும் விவகாரத்தில் என் நிலைப்பாட்டில் 50% பேருக்கு உடன்பாடும் 50% பேருக்கு எதிர்கருத்தும் உள்ளது; ஆனால், நான் உறுதியாக உள்ளேன்.

எந்த அரசியல் தலைவருக்கும் நான் எதிரியில்லை. நான் எந்த அரசியல் கட்சிக்கும், அரசியல் தலைவருக்கும் எதிரி இல்லை. தேர்தலை சந்திப்பது குறித்த என் நிலைப்பாட்டை கூறுகிறேன் அவ்வளவு தான்.

என் நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது, தேர்தலுக்கு பணம் செலவு செய்யும் அரசியல் எனக்கு தேவையில்லை. பணம் இல்லாத அரசியலை முன்னெடுத்தால் மட்டுமே தமிழ்நாடு வளர்ச்சியடையும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version