செய்திகள்

கருணாநிதியின் உடல் நலம் வேகமாக குணமடைய கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்: ரஜினிகாந்த்

Published

on

முன்னாள் முதல்வர் திமுகத் தலைவர் கருணாநிதி அவர்கள் உடல் நலம் சரியில்லாமல் ஜூலை 26 முதல் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் செவ்வாய்க்கிழமை நடிகர் மற்றும் விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ள ரஜினிகாந்த் அவர்கள் மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்து வந்துள்ளார்.

கருணாநிதி அவர்களைப் பார்த்துவிட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த் கருணாநிதியின் உடல் நலம் பற்றி அறிந்துகொள்ள இங்கு வந்ததாகவும் அழகிரி, ஸ்டாலின், கனிமொழி மற்றும் தமிழரசன் உள்ளிட்டோரைச் சந்தித்து ஆருதல் கூறியதாகவும் இதைத் தவிர என்னால் வேறு என்ன செய்ய முடியும்? கடவுளிடம் அவரது உடல் நலம் வேகமாகக் குணமடைய வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன் என்றும் கூறினார்.

ரஜினிகாந்த் சன் பிக்சார்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் வெளியூர் படப்பிடிப்பில் நடித்து வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு சென்னை திரும்பிய பிறகு கருணாநிதியின் உடல் நிலை குறித்துக் காவேரி மருத்துவமனைக்கு வந்து விசாரித்துச் சென்றுள்ளார்.

அதே போன்று காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தியும் செவ்வாய்க்கிழமை கருணாநிதியியை காவேரி மருத்துவமனைக்கு வந்து பார்த்து நலம் விசாரித்துச் சென்றுள்ளார்.

கருணாநிதியின் உடல் நலம் குறித்துச் செவ்வாய்க்கிழமை மாலை 6:30 மணியளவில் அறிக்கை வெளியிட்ட காவேரி மருத்துவமனை இவரது இடல் நலம் சீர் அடைந்து இருந்தாலும் தொடர்ந்து மருத்துவமனை கண்கானிப்பில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

முன்னதாகத் திங்கட்கிழமை முதல்வர் எடப்பாடி செல்வம், துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களும் காவேரி மருத்துவமனை வந்து கருணாநிதியின் உடல் நிலை குறித்துக் கேட்டறிந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version