தமிழ்நாடு

ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை: என்ன விலை தெரியுமா?

Published

on

தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து விண்ணைத் தொடும் அளவுக்கு இருக்கும் நிலையில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

கனமழை காரணமாக தக்காளி வரத்து மார்க்கெட்டில் குறைந்து உள்ளதை அடுத்து தக்காளி விலை 150 ரூபாயை தாண்டி உள்ளது என்பதும் விரைவில் 200 ரூபாயை ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தக்காளி மட்டுமன்றி கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்பட பல காய்கறிகளின் விலையும் உயர்ந்து உள்ளன என்பது குறிபிடத்தக்கது. இந்த நிலையில் தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பசுமை பண்ணைகளில் தக்காளி விலை ரூபாய் 79க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் இன்று அளித்த பேட்டியில் நகர்ப்புறம் மற்றும் அதனை சுற்றி உள்ள குறிப்பிட்ட ரேஷன் கடைகளில் காய்கறி மற்றும் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தக்காளிகளை ரூபாய் 79 என்றும், வெண்டைக்காய் கிலோ ஒரு ரூபாய் 70 என்றும், உருளைக்கிழங்கு ரூபாய் முப்பத்தி எட்டு என்றும் கத்தரிக்காய் கிலோ ரூபாய் 65 என்றும் என்ற விலையிலும் விற்பனை செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பு இல்லத்தரசிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version