தமிழ்நாடு

நகைக்கடன் தள்ளுபடி கிடைக்கவில்லையா? மீண்டும் ஒரு வாய்ப்பு தரும் தமிழக அரசு

Published

on

தமிழகத்தில் ஐந்து சவரனுக்குள் நகை கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது இருந்ததை அடுத்து ஏராளமானோர் விண்ணப்பம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நகை கடன் தள்ளுபடி செய்து விண்ணப்பம் செய்தவர்களில் 25 சதவீதம் பேர்கள் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் என தமிழக அரசு தேர்வு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 48.84 லட்சம் நகை கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வந்தநிலையில் 10.18 லட்சம் நகைக்கடன்கள் மட்டுமே தள்ளுபடிக்கு தகுதியானவை என தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.

மொத்தமுள்ள 48.84 லட்சம் நகை கடன்களில் 7.65 லட்சம் நகைக்கடன்கள் 40 கிராமுக்கு மேல் ஆனவை என்றும் 21.63 நகைக்கடன்கள் ஒரே குடும்ப அட்டையில் வெவ்வேறு நபர்கள் பெற்ற கடன்கள் என்றும் மீதமுள்ள 2.20 லட்சம் நகைக்கடன்கள் முறைகேடாக பெறப்பட்டு உள்ளன என்றும் 15.20 லட்சம் நகைக்கடன்களில் மீறல்கள் நடந்துள்ளன என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

எனவே 22 லட்சத்து 52 ஆயிரத்து 226 நகைக்கடன்களில் தற்போது 10 லட்சத்து 18 ஆயிரத்து 66 நகைக்கடன்கள் மட்டுமே தள்ளுபடிக்கு தகுதியானவை என தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஆனால் அதே நேரத்தில் நகைக்கடன்கள் பெற்றவர்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதார் விவரங்கள் சரியாக சமர்ப்பிக்க தவறியவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்ய தகுதியானவை அல்ல என்று ஒதுக்கப்பட்டதாகவும் அந்த நபர்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை விவரங்களை சமர்ப்பித்தால் மீண்டும் அவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்ய ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர்கள் தரும் ஆவணங்கள் சரி பார்த்த பின்னர் நகை கடனுக்கு தள்ளுபடிக்கு தகுதியானவர்களாக இருந்தால் அவை தள்ளுபடி செய்யப்படும் என்றும் அமைச்சர் பெரியசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

நகை கடன் தள்ளுபடியில் உண்மையான ஏழை எளிய மக்கள் மட்டுமே பயன் பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றும் கடந்த ஆட்சியில் நகை கடன்கள் மூலம் கோடிக்கணக்கில் முறைகேடுகள் நடந்து உள்ளதாகவும் அவை அனைத்தும் விசாரணை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஐ பெரியசாமி தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version