தமிழ்நாடு

1 லட்சத்து 34 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளரின் சாதனை வெற்றி! எதிர்த்த அனைவருக்கும் டெபாசிட் காலி!

Published

on

தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் மிக அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் சிலரை ஏற்கனவே பார்த்தோம்.

குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பதும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுமார் 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 82 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ஐ பெரியசாமி வெற்றி பெற்றுள்ளார். திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட இவர் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 82 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பது மட்டுமின்றி அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் பெற்ற வெற்றி இது என்பதால் இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version