தமிழ்நாடு

பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட நடத்துனர், ஓட்டுனர் சஸ்பெண்ட்: மன்னித்துவிடுங்கள் என மூதாட்டி வேண்டுகோள்

Published

on

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு பேருந்தில் மீனவ மூதாட்டி ஒருவர் ஓட்டுனர் மற்றும் நடத்துனரால் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் என்ற பகுதியில் மீன் விற்கு மூதாட்டி ஒருவர் மீன் கூடையுடன் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது அவரது கூடையில் இருந்து நாற்றம் வருவதாக கூறி நடத்துனர் மற்றும் ஓட்டுநர் பேருந்திலிருந்து அந்த மூதாட்டியை இறக்கிவிட்டுள்ளனர்.

இது குறித்து அழுது கொண்டே அவர் புலம்பிய காட்சியின் வீடியோ இணையதளத்தில் வைரலானது. இந்த தகவல் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வரை சென்றது என்பதும் உடனடியாக அவர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குமரி மாவட்டத்தில் மீன் விற்பனை செய்த தாய் ஒருவரை பேருந்து நடத்துனர் இறக்கி விட்டதாக கூறப்படும் நிகழ்வானது என்னை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்தது என்று கூறிய முதல்வர் ஸ்டாலின் அவர்கள், மகளிர் மேம்பாட்டுக்காக கட்டணமில்லா உரிமையை வழங்கி அதை நடத்துனர்கள் திறம்பட செயல்படுத்தி வரும் நிலையில் ஒருசில நடத்துனர்களின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் துர்நாற்றம் வீசுவதாக கூறி மீனவ மூதாட்டியை பேருந்திலிருந்து இறங்கி விட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் நிலையானது.

இந்த நிலையில் இதுகுறித்து மீனவ மூதாட்டி செல்வ மேரியம்மாள் செய்தியாளர்களிடம் பேசியபோது ’என்னை பேருந்தில் இருந்து இறங்கிவிட்ட நடத்துனர் மற்றும் ஓட்டுனர் ஆகிய இருவரையும் மன்னித்து விடுங்கள் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அது அவர்களின் குழந்தைகளை பாதிக்கும் என்றும் இனிமேல் எனக்கு ஏற்பட்ட நிலைமை வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் அவர்களுக்கு தனது நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version