சினிமா செய்திகள்

அம்மா வேடங்களே வருவதால் பட வாய்ப்புகளை தவிர்த்தேன் – ரம்யா நம்பீசன்!

Published

on

இளம் பட்டாளத்துடன் ரம்யா நம்பீசன் நடித்துள்ள நட்புன்னா என்னான்னு தெரியுமா படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அதிக படங்களில் ஏன் நடிப்பதில்லை என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு ரம்யா நம்பீசன் அம்மா வேடங்களே அதிகம் வந்ததால் பட வாய்ப்புகளை தவிர்த்ததாக கூறினார்.

பீட்ஸா, குள்ளநரிக் கூட்டம் படங்களில் நடித்த ரம்யா நம்பீசன், விஜய்சேதுபதியின் சேதுபதி படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தார். மேலும், சீதக்காதி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது கவின் நடிப்பில் உருவாகியுள்ள நட்புன்னா என்னான்னு தெரியுமா படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

சேதுபதி படத்திற்கு பிறகு முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடிப்பு வாய்ப்புகள் வந்தாலும், அம்மா கேரக்டராகவே வந்ததால், அந்த படங்களில் நடிப்பதை தவிர்த்தேன் என ரம்யா நம்பீசன் தெரிவித்தார்.

நட்புன்னா என்னான்னு தெரியுமா படத்தில் இளைஞர்கள் பட்டாளம் இருந்ததால், எனக்கு பிடித்த ரோல் அமைந்ததால் புதுமுக நடிகர் என்றும் பாராமல் நடிக்க ஒப்புக் கொண்டேன். மேலும், இதுதான் தனக்கும் பிடித்துள்ளது என்று கூறினார்.

தமிழ்ச்செல்வன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ரம்யா நம்பீசன் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version