தமிழ்நாடு

பாடநூல் கழக தலைவராக பொறுப்பேற்ற லியோனியின் முதல் பேட்டி

Published

on

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்று உள்ளார் திண்டுக்கல் ஐ.லியோனி.

இன்று அவர் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட லியோனி செய்தியாளர்கள் மத்தியில் பேசியதாவது:-

2011 ஆம் ஆண்டு ஆசிரியர் பொறுப்பிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றேன். அப்போது பாடநூலைக் கீழே வைத்தேன். தற்போது 10 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பாடநூலை எடுக்க வைத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

30, 35 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி இருக்கிறேன். எனவே, பாடநூலை எடுத்து ஒரு மாணவர் படிக்கும் போது அதை அவர் விரும்பி படிக்க வேண்டும். மகிழ்ச்சியோடு பாடநூலை எடுக்க வேண்டும் என்பது தான் எனது நோக்கம். அதற்குரிய பணிகளைச் செய்வேன்.

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பது முதல்வரின் தொலைநோக்குப் பார்வை. அதற்குரிய வகையில் பாடநூலின் தரத்தை உயர்த்திக் காட்டுவோம்.

மாணவர்களுக்குப் பாடநூலை இலவசமாக கொடுக்கும் பணியை இந்தத் துறை தான் செய்து கொண்டிருக்கிறது. ஒரு சுய சார்பு நிறுவனத்துக்குத் தலைவராக பொறுப்பேற்க வைத்ததற்கு முதல்வருக்கு நன்றி. என்னுடைய காலக்கட்டத்தில் செய்யும் பணி மூலம், லியோனி இந்தக் காரியத்தைச் செய்தார் என்று முத்திரைப் பதிக்கும் வகையில் என் செயல்பாடு இருகுகம் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

 

 

Trending

Exit mobile version