தமிழ்நாடு

இளைஞர்களின் ஃபுல் சப்போர்ட் எனக்குதான்: சொல்கிறார் ‘மய்யம்’ பத்மப்ரியா 

Published

on

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறார் பிரபல யூடியூபர் பத்மப்ரியா. இந்நிலையில் தனக்கு வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

இவர் சில மாதங்களுக்கு முன்னர், மத்திய அரசு வெளியிட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்து கடுமையாக விமர்சித்து ஒரு வீடியோ பதிவேற்றினார். அந்த வீடியோவுக்காக பாஜகவினர், பத்மப்ரியாவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அவர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். தொடர்ந்து அவருக்கு மதுரவாயல் தொகுதியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. 

இன்று அவர் மதுரவயாலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுத் தாக்கலை செய்தார். பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், ‘மதுரவாயல் தொகுதியைப் பொறுத்தவரை, பழைய அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் போனால் போதும் என்கிற மனநிலையில் தான் இருக்கின்றனர். 

என்னுடன் போட்டியிடுபவர்கள் வயதிலும், அரசியலிலும் மட்டுமல்ல ஊழலிலும் அனுபவம் பெற்றவர்கள் தான். அவர்களை எதிர்த்துப் போட்டியிடும் இளம் வயது வேட்பாளர் நான் மட்டும் தான். நான் மட்டும் தான் இந்த தொகுதியின் பெண் வேட்பாளராகவும் இருக்கினேன். 

மதுரவாயல் தொகுதியைப் பொறுத்தவரை இளைஞர்களின் ஆதரவு எனக்கு அதிகம் இருக்கின்றது. அதனால் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன்’ என்று நம்பிக்கைத் ததும்ப கூறியுள்ளார். 

Trending

Exit mobile version