உலகம்

தேர்தல் நேரத்தில் தீவிரவாத தாக்குதல் சந்தேகம் அளிக்கிறது.. மமதா பானர்ஜி கேள்வி!

Published

on

கொல்கத்தா: சரியாக லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நேரத்தில் புல்வாமா தாக்குதல் நடந்திருப்பது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

மமதா பானர்ஜி தனது பேட்டியில், புல்வாமா தாக்குதல் சந்தேகம் அளிக்கிறது. புல்வாமா தாக்குதல் சரியாக தேர்தலுக்கு முன் நடந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மதக்கலவரத்தை உண்டாக்க பாஜக முயல்வதாக சந்தேகம் வருகிறது. இந்தியாவில் ஒருமைப்பாட்டை பாதுகாக்க வேண்டும்.

இந்த தீவிரவாத தாக்குதல் காரணமாக கலவரம் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது. அப்படி நடக்க கூடாது. யார் மீது யாரும் கோபம் கொண்டு தாக்குதல் நடத்த கூடாது. மக்கள் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில்தான் அமைதி காக்க வேண்டும்.

இந்த தாக்குதலில் பலியான மேற்கு வங்கத்தை சேர்ந்த வீரர்களின் குடும்பத்திற்கு உரிய நிதி உதவி அளிக்கப்படும். எங்களால் முடிந்த அனைத்து உதவிகளை அவர்களின் குடும்பத்திற்கு செய்ய இருக்கிறோம், என்று மமதா பானர்ஜி தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version