தமிழ்நாடு

எத்தனை தேசத்துரோக வழக்குகள் போட்டாலும் தொடர்ந்து பேசுவேன்: வைகோ ஆவேசம்!

Published

on

தேசதுரோக வழக்கில் குற்றவாளி என சிறப்பு நீதிமன்றத்தால் ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, எத்தனை தேசத்துரோக வழக்குகள் போட்டாலும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து பேசுவேன் என கூறியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் படுகொலையின் பத்தாமாண்டு நினைவு நாள் தஞ்சையிலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட வைகோ பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஈழத்திலே கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் ரத்தமும், தியாகம் செய்த உயிர்களும் வீண் போகாது. இந்த இனப்படுகொலைக்குக் காரணமான சிங்கள இனவாத அரசை அனைத்துலக நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும்.

சுதந்திர தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். வடக்கிலும் கிழக்கிலும் குவிக்கப்பட்டுள்ள சிங்கள ராணுவம் வெளியேற்றப்பட வேண்டும். பறிக்கப்பட்டுள்ள தமிழர் நிலங்கள் மீண்டும் தமிழர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். சிங்களக் குடியிருப்புகள் அகற்றப்பட வேண்டும் என்றார். மேலும் எத்தனை தேசத்துரோக வழக்குகள் போட்டாலும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து பேசுவேன். தமிழகம் எல்லா விதத்திலும் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்றார்.

Trending

Exit mobile version