சினிமா செய்திகள்

பகவத் கீதையை நான் அவமதிக்கவில்லை: விஜய்சேதுபதி விளக்கம்!

Published

on

நடிகர் விஜய்சேதுபதி மக்கள் செல்வன் என்ற பெயரை பெற்றது சிலருக்கு பிடிக்காமல் போயுள்ளது. மேலும், சமீப காலமாக அவர் சன் டிவியில் நிகழ்ச்சிகளை நடத்துவது, அரசியல் குறித்த கருத்துக்களை வெளிப்படையாக சொல்வதாலும், அவருக்கும் ஹேட்டர்ஸ் வர தொடங்கி விட்டனர்.

இந்நிலையில், நேற்று பகவத் கீதை புனித நூல் கிடையாது. இன்றைய சீரழிவுக்கு இதுபோன்ற கற்பனையான நூல்கள் தான் காரணம் என நடிகர் விஜய்சேதுபதி சொன்னதாக நியூஸ் 7 தொலைக்காட்சியின் டெம்ப்ளேட்டுடன் ஒரு போட்டோஷாப் செய்யப்பட்ட ஃபேக் நியூஸ் காட்டுத் தீயாய் பரவியது.

மேலும், இந்து அமைப்புகள் விஜய்சேதுபதிக்கு எதிராக கொந்தளிக்கவும் தொடங்கினர். இந்நிலையில், அது போலியான எடிட் செய்யப்பட்ட செய்தி என்றும், நிஜ செய்தி, டெம்ப்ளேட் இதுதான் என்றும், ரியல் மற்றும் ஃபேக் என இரு புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட விஜய்சேதுபதி,

”என் அன்பிற்குரிய மக்களுக்கு பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலை பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாக பேசியதும் இல்லை பேசவும் மாட்டேன் சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது எந்த சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையும் ஒற்றுமையும் குலைக்குமாறு நான் நடந்து கொள்ளவே மாட்டேன்” என்ற ட்வீட்டையும் விளக்கமாக அளித்துள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version