தமிழ்நாடு

ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிட்டால் ஃபாஸ்டாக மேலே போயிடலாம்.. சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்!

Published

on

சென்னை: அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் எதையும் வெளிப்படையாகவும் நகைச்சுவையாகவும் பேசுபவர். கட்சி மற்றும் அதிமுக அரசு மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்குச் சரியான விளக்கங்களையும் அளிக்கக் கூடியவர்.

இப்படிப் பட்ட அமைச்சர் ஜெயக்குமார் ‘தான் இது வரை பீட்ஸா, பர்கரை சாப்பிட்டதே இல்லை என்றும், உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பர், ஆனால் இப்போது உப்புள்ள உணவு சாப்பிட்டால் தொப்பைதான் வளர்கிறது’ என்றும் கூறியுள்ளார்.

மேலும் ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிட்டால் ஃபாஸ்டாக மேலே போய்விடலாம், சீட்டு வாக்க வேண்டிய அவசியமே இல்லை என்றும் அமைச்ச ஜெயக்குமார் கூறியுள்ளார். இதை நகைச்சுவையாக மட்டும் எடுத்துக்கொள்ளாமல் அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயமாகவும் உடல் ஆரோக்கியம் குறித்ததாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version