தமிழ்நாடு

“நான் கருணாநிதியை கிண்டல் செய்யலைங்க!” – கமல் சொல்லும் புது விளக்கம்!

Published

on

அரசியல் வாழ்க்கையில் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு மக்களைத் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஒரு பக்கம் கமல் பேசியது, தமிழக முன்னாள் முதல்வரான கருணாநிதியைப் பற்றித் தான் என்று விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இன்னொரு புறம், அவர் மாற்றத் திறனாளிகளை கேலி செய்யும் வகையில் பேசியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆண்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. அந்த விழாவில் பேசிய கமல்ஹாசன், ‘நான் சர்க்கர நாற்காலியில் அமரும் நேரம் வரும் போது மக்களை தொந்தரவு செய்ய மாட்டேன்’ எனப் பேசினார்.

இந்நிலையில் இன்று தாம்பரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கமல், ‘முதுமையை கேலி செய்ய முடியாது. அது உங்களுக்கும் வரும் எனக்கும் வரும். அந்த வயதில் எதுவும் செய்ய முடியாது என்பது தான் என்னுடைய கணிப்பு. அதே நேரத்தில் என்னுடைய முதுமை எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது.

கருணாநிதியின் மேல் எனக்கு அதிக மரியாதை உண்டு. நான் என்னுடைய சக்கர நாற்காலியைப் பற்றியும், என்னுடைய முதுமையைப் பற்றியும் தான் மேடையில் பேசினேன்’ என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

 

Trending

Exit mobile version