தமிழ்நாடு

மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்: சென்னையில் கமல் பிரச்சாரம்

Published

on

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் சென்னையில் நேற்று பிரசாரம் செய்தபோது அரசியலுக்கு தாமதமாக வந்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.

சென்னை மதுரவாயில் சட்டப்பேரவை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பத்மபிரியா மற்றும் பூந்தமல்லி தொகுதி வேட்பாளர் ரேவதி மணிமேகலை ஆகியோர்களுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியபோது ’இந்த தொகுதியில் நிற்கும் வேட்பாளர் வயதில் குறைவானவர் என்றாலும் அதிகம் படித்தவர் என்றும், உங்கள் பகுதியை சேர்ந்தவர் என்று கூறினார்.

மேலும் என்னுடைய கட்சியில் என்னை விட வயதில் குறைவானவர்கள் தான் அதிகம் என்றும் என்னுடைய கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் இளைஞர்கள் என்றும் புதிதாக ஓட்டு போடும் இளைஞர்கள் அதிகம் எங்கள் கட்சிக்கு வந்து உள்ளார்கள் என்றும் அதனால் தான் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று கூறியுள்ளார்.

எங்கள் வேட்பாளர் யார் மீதும் குற்ற வழக்குகள் இல்லை என்றும், கட்டப்பஞ்சாயத்து பிரச்சனை இல்லை என்றும் நாங்கள் வீரத்தின் உச்சக்கட்டம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அரசியலுக்கு மிகவும் தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் காமராஜர் போன்ற தலைவர்கள் இளம் வயதிலேயே அரசியலுக்கு வந்து தங்கள் சேவையை செய்தார்கள் என்றும் ஆனால் தான் மிகவும் தாமதமாக அரசியலுக்கு வந்திருப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version