தமிழ்நாடு

சசிகலா முடிவால் சோர்வு, அரை மணி நேரம் வாதாடினேன்: டிடிவி தினகரன்

Published

on

அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா எடுத்த முடிவால் சோர்வடைந்து உள்ளேன் என்றும் அரசியலில் இருந்து விலக வேண்டாம் என அவரிடம் அரை மணி நேரம் வாதாடினேன் என்றும் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் கூறியுள்ளார்.

மேலும் எம்ஜிஆர், ஜெயலலிதா தொண்டர்கள் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சசிகலா தான் கூற வேண்டும் என்றும், சட்டமன்ற தேர்தலில் அமமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஒற்றுமையை விரும்பியதால் தான் சசிகலா அந்த முடிவை எடுத்தார் என்றும், சிறையிலிருந்து வெளியே வந்ததும் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பார்கள் என்று சசிகலா எண்ணினார் என்றும், ஆனால் அது நடக்கவில்லை என்பதால் மனதில் உள்ளதை வெளிச்சமாக அவர் கூறியுள்ளார் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட வேண்டும் என்பதற்காகத்தான் சசிகலா இந்த முடிவை எடுத்துள்ளார் என்றும் சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கும் முடிவெடுத்து உள்ளதால் அவருக்கு பின்னடைவு எதுவும் இல்லை என்றும் அவர் அதிமுகவை மீட்க இப்பொழுதும் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

Trending

Exit mobile version