தமிழ்நாடு

‘நான்தான் தமிழகத்தின் பிக் பாஸ்!’- சீமான் சொல்லும் ‘அடடே’ விளக்கம்

Published

on

நாம் தமிழர் கட்சி, இதுவரை சந்தித்த அனைத்துத் தேர்தல்களைப் போலவே 2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலையும் தனித்தே சந்திக்கிறது. முன்னர் நடந்த தேர்தலில் ஆணுக்கும் பெண்ணுக்கு சரிபாதி தொகுதிகள் ஒதுக்கியது போலவே, இந்த தேர்தலிலும் சமமாக இடங்களை ஒதுக்கி களத்தில் நிற்கிறது நாம் தமிழர். அந்தக் கட்சியின் தலைமைப் பேச்சாளரான சீமான், கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்துத் தொடர்ந்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

இந்த முறை சீமான், சென்னை, திருவொற்றியூர் தொகுதியில் நேரடியாக களமிறங்கியுள்ளார். இந்நிலையில் தன் தொகுதிக்கு உட்பட்ட இடத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட சீமான், ‘தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ஒரே ஆளாக, தன்னந்தனியாக நிற்கும் கட்சி நாம் தமிழர் மட்டும் தான். அப்படியென்றால், தமிழகத்தின் மிகப் பெரும் கட்சி நாங்கள் தானே. நான் தானே தமிழகத்தின் பிக் பாஸ்.

அனைத்துத் தொகுதிகளிலும் நான் பிரச்சாரம் செய்கிறேன். கொஞ்சம் கூட காசு கொடுக்காமல் கூட்டம் கூடுகிறது. இப்படி யாருக்காவது கூடுமா. எனக்குத் தான் தமிழகத்தில் அதிக செல்வாக்கு உள்ளது’ என்று கூறியுள்ளார்.

Trending

Exit mobile version