இந்தியா

இந்தியில் கேள்வி கேட்டதால் நான் தமிழன் என நீதிமன்றத்தில் கெத்துகாட்டிய சுப்பிரமணியன் சுவாமி!

Published

on

நீதிமன்றத்தில் தன்னிடம் இந்தியில் கேள்வி கேட்ட வழக்கறிஞரிடம் நான் தமிழன், ஆங்கிலத்தில் கேளுங்கள் என சுப்பிரமணியன் சுவாமி கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி மீதான நேஷனல் ஹெரால்ட் வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இதில் வழக்கை தொடர்ந்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியிடம் ராகுல், சோனியா தரப்பு வழக்கறிஞர் சீமா வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி கேள்விகளை கேட்டார். அப்போது சீமா இந்தியில் கேள்விகளை கேட்டார். இதற்கு சுப்பிரமணியன் சுவாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆங்கிலத்தில் பேசுங்கள், நீதிமன்றத்தின் மொழி ஆங்கிலன் தான் என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டுமே நீதிமன்றத்தின் மொழிதான். மேலும் இந்தி தேசிய மொழி என்றார். இதனை அடுத்து மீண்டும் சுப்பிரமணியன் சுவாமியிடம் சீமா இந்தியில் கேள்வி எழுப்பினார். இதற்கு மீண்டும் ஆட்சேபம் தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமி, ஆங்கிலத்தில் பேசுங்கள், நான் தமிழன் என்றார். இதனையடுத்து வழக்கறிஞர் சீமா ஆங்கிலத்தில் கேள்வி கேட்டார். இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

seithichurul

Trending

Exit mobile version