தமிழ்நாடு

நான் கலைஞரின் பிள்ளை: மு.க.அழகிரி ஆவேசம்!

Published

on

திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுவிட்டார். ஆனாலும் அழகிரியின் அதிரடி பேட்டிகள் குறைந்தபாடில்லை. ஸ்டாலினை தலைவராக ஏற்க தயாராக இருக்கிறேன் என்னை கட்சியில் சேர்த்துக்கொண்டால் போதும் என கெஞ்சியும் பார்த்தாச்சு அழகிரியின் இந்த கோரிக்கையும் திமுக தலைமையால் ஏற்றுக்கொண்டபாடில்லை. இதனால் அழகிரி தரப்பு டென்சனாகவே உள்ளது.

கலைஞரின் உண்மையான தொண்டர்கள் என்பக்கம் தான் உள்ளார்கள், எனது பலத்தை விரைவில் நிரூபிப்பேன் என கூறிவந்த மு.க.அழகிரி செப்டம்பர் 5-ஆம் தேதி கலைஞர் சமாதி நோக்கி ஒரு லட்சம் பேருடன் பேரணி செல்ல உள்ளதாக கூறியிருந்தார். இதற்காக தொடர்ந்து பத்து நாட்களாக தனது ஆதரவாளர்களுடம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் மு.க.அழகிரி. அப்போது, நான் கலைஞரின் பிள்ளை, சொன்னதை செய்வேன். சென்னையில் நடைபெறும் அமைதிப் பேரணியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என்றார் ஆவேசமாக. இதனையடுத்து இந்த பேரணியில் தமிழகம் முழுவதிலும் இருந்து வரும் தொண்டர்கள் யாருக்கும் எந்த இடையூறும் செய்யாமல் கலந்துகொள்ள வேண்டும் என அறிக்கையும் வெளியிட்டுள்ளார் அழகிரி.

seithichurul

Trending

Exit mobile version