தமிழ்நாடு

கன்னியாகுமரியில் பாஜக தோற்கவில்லை, மதவாதம்தான் வெற்றி பெற்றுள்ளது: பொன்னார் ஆவேசம்!

Published

on

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக நாடு முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றாலும் தமிழகத்தில் போட்டியிட்ட ஐந்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது. கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூட காங்கிரஸ் வேட்பாளர் வசந்த குமாரிடம் இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

இந்நிலையில் இன்று திருசெந்தூரில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், 1967-இல் இருந்தே திமுக பொய் வாக்குறுதிகளை அளித்தே வெற்றிபெற்றுவருகிறது. அதே வெற்றியை தற்போதும் பெற்றிருக்கிறார்கள். உண்மையில் தமிழர்கள்தான் இங்கு ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். நாங்கள் வெற்றிபெற்று வந்தால் ஆண்டுக்கு ரூ.72000 ரூபாய் தருவோம் என்று சொல்லித்தான் காங்கிரஸ்,திமுக கூட்டணி தமிழகத்தில் வெற்றிபெற்றது. மக்கள் அதற்காகத்தான் அவர்களுக்கு ஓட்டுப்போட்டுள்ளனர்.

நகைக் கடன், கல்விக் கடனை தள்ளுபடி செய்வேன் என்றீர்களே அதனை செய்யுங்கள். தேர்தலில் வெற்றிபெற்ற திமுக கூட்டணியை சேர்ந்த 37 பேரும் கோடிஸ்வரர்கள்தானே. சொத்தை விற்று மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். ஏன் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுகிறீர்கள். கன்னியாகுமரி தொகுதியில் பாஜக தோற்கவில்லை. அங்கே மதவாதம்தான் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் பாஜகவின் தோல்விக்கு நானே பொறுப்பேற்றுக்கொள்கிறேன் என்றார். கன்னியாகுமரி தொகுதியில் கிறிஸ்தவ வாக்குகள் அதிகமாக  இருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version