தமிழ்நாடு

நான் பாஜகவில் சேர தயார்.. சவால் விட்ட உதயநிதி? என்ன காரணம் தெரியுமா?

Published

on

சென்னை: பாஜகவில் சேருவது குறித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் செய்திருக்கும் டிவிட் பெரிய வைரலாகி உள்ளது.

பாஜக இளைஞரணியின் தமிழக துணைத்தலைவர் எஸ்.ஜி சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில்உதயநிதிக்கு திமுகவில் டிரஸ்டி பதவி அளிக்கப்பட்டு இருக்கிறது. திமுகவின் கோடி கோடியான பணங்களை கட்டுப்படுத்தும் பதவி அது. இதையும் திமுகவினர் சரி என்று கூறுவார்கள்.

உதயநிதியையும் தமிழிசை மற்றும் நிர்மலாவுடன் ஒப்பிட்டு பேசுவார்கள், என்று கிண்டலாக எஸ்.ஜி சூர்யா குறிப்பிட்டார்.

இதற்கு தற்போது உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அதில், ”நீங்கள் சொல்வதை உங்களால் நிரூபிக்க முடியுமா.. உங்களால் முடிந்தால் நான் பாஜகவில் சேர தயார்… அதுதான் எனக்கு அளிக்கப்பட கூடிய மோசமான தண்டனையாக இருக்கும்” என்று கிண்டலாக பதில் கூறியுள்ளார்.

உதயநிதியின் இந்த டிவிட் பெரிய வைரலாகி உள்ளது. 1500 பேர் இதை லைக் செய்து இருக்கிறார்கள். 500 பேர் வரை இதை ரீடிவிட் செய்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version