சினிமா செய்திகள்

’குக் வித் கோமாளி’ சீசன் 3க்கு போக மாட்டேன்: பிரபல தமிழ் நடிகை

Published

on

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன்1ஐ சீசன் 2 மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும், இதனால் சீசன் 3 இல் இடம்பெற வேண்டும் என பல தொலைக்காட்சி பிரபலங்கள் மற்றும் ஒரு சில திரையுலக பிரபலங்கள் திட்டமிட்டுள்ளனர் என்றும் தகவல் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 3 இல் தனக்கு அழைப்பு வந்தால் செல்ல மாட்டேன் என தமிழ் நடிகை ஒருவர் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய் நடித்த நண்பன் உள்பட பல தமிழ் படங்களிலும் தெலுங்கில் சில படங்களிலும் நடித்தவர் நடிகை அனுயா.

இவர் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு சில நாட்களிலேயே போட்டியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ’குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் அழைக்கப்பட்டால் செல்வீர்களா என்று கேட்டபோது ’செல்ல மாட்டேன்’ என்று நடிகை அனுயா கூறினார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நான்ஸ்டாப் காமெடி செய்ய வேண்டும் என்றும் தனக்கு தமிழ் சரியாக வராது என்பதால் தன்னால் தமிழில் காமெடி செய்ய முடியாது என்றும் அதனால் அந்த நிகழ்ச்சிக்கு அழைத்தால் நான் செல் மாட்டேன் என்றும் அனுயா கூறியுள்ளார்.

Trending

Exit mobile version