தமிழ்நாடு

நான் என்ன பாம்பா, பல்லியா? ஊர்ந்து போக, மனுஷங்க: எடப்பாடி பழனிசாமி

Published

on

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஊர்ந்து செல்லும் முதல்வர் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அவ்வப்போது கேலியும் கிண்டலும் செய்துள்ளார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூட அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து கேலி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு பதிலடி தரும் வகையில் புவனகிரியில் இன்றைய தேர்தல் பிரச்சார மேடையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். நான் ஊர்ந்து போய் முதல்வர் பதவி பெற்றேன் என ஸ்டாலின் பேசி வருகிறார். எனக்கு கால் இல்லையா? நான் என்ன பாம்பா, பல்லியா? ஊர்ந்து செல்வதற்கு? நான் மனுசங்க’ என்று அதிரடியாக பதில் அளித்து உள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் திமுகவின் ஊடகமொன்று அவர் ஊர்ந்து சென்று சசிகலாவின் காலில் விழும் வீடியோவையும் இந்த செய்தியையும் மாறிமாறி பதிவு செய்துள்ளது என்பதும் இதற்கு நெட்டிசன்கள் பல்வேறு கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version