தமிழ்நாடு

எம்ஜிஆர் குணம் எனக்கும் உண்டு: செல்லூர் ராஜூ!

Published

on

மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகத்தில் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டில் பிஸியாக உள்ளது. அதிமுகவில் இழுபறியாக நீடித்து வந்த கூட்டணி குழப்பம் ஒருவழியாக தற்போது முடிவிக்கு வந்துள்ளது.

பாஜக, பாமக கட்சிகளுடன் நேற்று கூட்டணி குறித்து அதிமுக ஒப்பந்தமிட்டு அறிவித்ததின் மூலம் தமிழகத்தில் கூட்டணி குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. முன்னதாக பாஜகவை அதிமுக கடைசி நேரத்தில் கழட்டிவிடும் மற்றும் பாமக திமுக கூட்டணியில் சேரவும் வாய்ப்புள்ளது என கூறப்பட்டது. இந்த இரண்டு சந்தேகங்களுக்கும் நேற்று முடிவுக்கு வந்துவிட்டது.

இந்நிலையில் இந்த பாஜக, பாமக, அதிமுக கூட்டணி குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் இதனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கூட்டணி குறித்து தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, எம்ஜிஆரின் குணம் எனக்கும் உண்டு. ஜெயலலிதா இல்லாத காலத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் கூட்டணி குறித்து சரியான முடிவையே எடுத்திருக்கின்றனர். பணக்காரர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரை நம்பி அதிமுக இல்லை என தெரிவித்தார்.

Trending

Exit mobile version