தமிழ்நாடு

முதல்வர் வேட்பாளர் நான் தான்: கமல் அறிவிப்பால் சரத்குமார் அதிர்ச்சியா?

Published

on

அதிமுக திமுகவுக்கு மாற்றாக புதிய கூட்டணி வராதா? என மக்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்த நிலையில் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் கமல் தலைமையிலான புதிய கூட்டணி ஒன்று தற்போது உருவாகி இருக்கிறது.

இந்த கூட்டணியில் தற்போது சரத்குமார் மற்றும் ஐஜேகே, சட்ட பஞ்சாயத்து இயக்கம் ஆகியவை இணைந்து உள்ளது என்பதும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் பழ கருப்பையா இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த புதிய கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நான்தான் என கமல்ஹாசன் சற்றுமுன் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். ஆனால் கமலஹாசனை சந்தித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் அவர்கள் முதலில் கமல் கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம் என்றும், தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு செய்வோம் என்று கூறியிருந்தார்.

சரத்குமார் பேட்டி அளித்த ஒரு சில நிமிடங்களிலேயே கமலஹாசன் இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நான்தான் என கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கமல்ஹாசனின் இந்த பேட்டியை சரத்குமாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் தெரிகிறது. இருப்பினும் முதல்வர் வேட்பாளர் குறித்த பேச்சுவார்த்தை நடத்தி ஒருமித்த கருத்துடன் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version