இந்தியா

பேட்மிண்டன் விளையாடியபோது திடீரென மாரடைப்பு.. பரிதாபமாக மரணம் அடைந்த 38 வயது நபர்..!

Published

on

பேட்மிட்டன் விளையாடிகொண்டிருந்த போது 38 வயது நபர் ஒருவர் திடீரென மாரடைப்பு காரணமாக சரிந்து விழுந்து மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாகவே இளம் வயதினர் மாரடைப்பால் மரணம் அடைந்து வருவது மருத்துவ உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி 19 வயது இளைஞர் ஒருவர் ஹைதராபாத்தில் அருகே திருமண விருந்து ஒன்றில் கலந்து கொண்டு நடனமாடிய போது திடீரென சரிந்து விழுந்து மரணம் அடைந்தார். அவரது மரணம் குறித்து பிரேத பரிசோதனையில் மாரடைப்பால் ஏற்பட்டது என்னது தெரியவந்தது.

அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்னால் ஜிம் பயிற்சி செய்து கொண்டிருந்த தெலுங்கானா மாநில போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் புஷ்ஷப் என்ற உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு இருமல் வந்ததாகவும் இதனை அடுத்து அவர் சரிந்து விழுந்து உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ஹைதராபாத்தில் சேர்ந்த ஷ்யாம் யாதவ் என்ற 38 வயது நபர் பேட்மிட்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மரணம் அடைந்தார். அவர் தினமும் இரவில் கிரிக்கெட் அல்லது பேட்மிட்டன் விளையாடுவது வழக்கம் என்றும் சக ஊழியர்களுடன் அவர் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு வந்து சரிந்து விழுந்ததாகவும் உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் தீவிர மருத்துவ பரிசோதனை அவருக்கு செய்யப்பட்டும், அவர் சிகிச்சையின் பலன் இன்றி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக இளம் வயதினர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து வருவதற்கு கொரோனா வைரஸ் நோய் ஒரு காரணம் என்று கூறப்பட்டு வருகிறது. இதுகுறித்து மருத்துவரீதியாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னரே இதுபோன்ற இளம் வயதினருக்கு எந்தவிதமான முன் அறிகுறி இன்றி மாரடைப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version