இந்தியா

ஐதராபாத் என்கவுன்ட்டர் போலியானது: 10 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய பரிந்துரை!

Published

on

ஐதராபாத்தில் 4 பேர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டது போலியானது என்றும் இதனை அடுத்து 10 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் விசாரணை குழுவ உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நெடுஞ்சாலையில் எரித்துக் கொல்லப்பட்டார். இந்த குற்றம் சம்பந்தமாக 4 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களை விசாரணை செய்தபோது திடீரென என்கவுண்டர் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த என்கவுண்டருக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில் இந்த என்கவுண்டர் போலியானது என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து விரிவாக விசாரணை செய்ய மூன்று நீதிபதிகள் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடந்தது.

இந்த விசாரணையின் முடிவில் இந்த என்கவுன்டர் முழுக்க முழுக்க போலியானது என்றும் நான்கு பேரையும் கொலை செய்ய வேண்டும் என்பதற்காகவே என்கவுண்டர் செய்யப்பட்டது என்றும் கூறி இந்த என்கவுண்டர் குறித்து 10 போலீஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை அளித்துள்ளது.

இந்த அறிக்கையின் பரிந்துரையின் படி காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

seithichurul

Trending

Exit mobile version