தமிழ்நாடு

கணவரை எதிர்த்து போட்டியிட்ட மனைவிக்கு ஒரே ஒரு ஓட்டு: கணவர் அமோக வெற்றி!

Published

on

நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு வினோதங்கள் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ஒரே ஒரு ஓட்டு பெற்ற வேட்பாளர், ஒரே ஒரு ஓட்டு கூட பெறாத வேட்பாளர், அனைத்து சின்னத்திலும் வாக்களித்த வாக்காளர்கள், வாக்குச் சீட்டை வீட்டிற்கு கொண்டுவந்து வாக்காளர் என பல்வேறு விவாதங்கள் நடந்து உள்ளது.

அந்த வகையில் தேனி மாவட்டத்தில் ஒரே தொகுதியில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு கணவன் மனைவி ஆகிய இருவரும் போட்டியிட்டதில் கணவர் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அவரது மனைவிக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டும் பெற்றது பெரும் வினோதமாக பார்க்கப்படுகிறது.

தேனி மாவட்டம் கடமலை மயிலை ஊராட்சி ஒன்றியத்தின் எட்டாவது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் கருப்பையா என்பவர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அவரது மனைவி ஈஸ்வரி என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக உள்பட 6 வேட்பாளர்கள் களத்தில் நின்ற நிலையில் கருப்பையா 1702 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். அவரது மனைவி ஈஸ்வரி ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஓட்டு ஓட்டையும் அவர் மட்டுமே செலுத்தி இருப்பார் என்பது யூகிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கருப்பையா இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியபோது தேர்தல் வேலைக்கு பூத் ஏஜெண்டுகள் வேண்டும் என்பதால் என் மனைவியை நானே நிறுத்தினேன் என்றும் பொதுவாக வேறொருவரை வேட்பாளராக நிறுத்துவார்கள் என்றும் ஆனால் நான் என் மனைவியை நிறுத்தினேன் என்றும் அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது கூட எனக்காகத்தான் ஓட்டு சேகரித்தார் என்றும் அப்படி இருந்தும் அவருக்கு ஒரு ஓட்டு பெற்று உள்ளது ஆச்சரியமாக இருக்கிறது என்றும் கூறினார். இதுவும் ஒரு ராஜதந்திரமாக தேர்தல் விஷயத்தில் பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version