தமிழ்நாடு

வேலை பார்க்கும் நிறுவனத்தில் திருடி ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த கணவன் – மனைவி கைது

Published

on

வேலை பார்க்கும் நிறுவனத்தில் 47 லட்ச ரூபாய் திருடி மொத்த பணத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த கணவன் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு என்ற பகுதியை சேர்ந்தவர் திரவிய சுந்தரம். இவர் சென்னையில் உள்ள பருப்பு கம்பெனி ஒன்றில் 18 ஆண்டுகளாக வேலை பார்த்துள்ளார்./ இதே கம்பெனியில் அவரது மகன் தீபன் ராஜ் என்பவரும் வேலைக்கு சேர்ந்து உள்ள நிலையில் அந்த கம்பெனியில் வேலை பார்த்த யுவராணி என்பவருடன் தீபக்ராஜூக்கு காதல் ஏற்பட்டதை அடுத்து இருவருக்கும் திருமணம் நடந்து உள்ளது.

இந்த நிலையில் தந்தை, கணவன், மனைவி ஆகிய மூவரும் சேர்ந்து போலி ரசீதுகள் தயாரித்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தெரிய வந்தது. இதனை அடுத்து பருப்பு கம்பெனியின் உரிமையாளர் காவல்துறையில் புகார் அளித்தார். தங்களது நிறுவனத்தில் 47 லட்ச ரூபாய் மோசடி செய்ததாகவும் அவர் அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் திடீரென தீபன் ராஜ் மற்றும் யுவராணி ஆகியோர் தலைமறைவாகி விட அவர்களை போலீசார் தேடி வந்தனர்/ இந்த நிலையில் சென்னை பாரிமுனையில் அவர்கள் தங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்த நிலையில் போலீசார் அவர்களை கைது செய்தனர்.

47 லட்ச ரூபாய் திருடியவர்களிடம் வெறும் முப்பதாயிரம் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது. மீதி உள்ள அனைத்து பணத்தையும் ஆன்லைன் ரம்மியில் இழந்ததாக வாக்குமூலத்தில் தீபன் ராஜ் கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version