உலகம்

உலக பணக்காரர் பட்டியலில் முதல் 10 இடங்களில் ஒரே ஒரு இந்தியர்!

Published

on

தனியார் நிறுவனம் ஒன்று உலக பணக்காரர் பட்டியல் வெளியிட்டுள்ள நிலையில் முதல் 10 இடங்களில் ஒரே ஒரு இந்தியர் மட்டுமே இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹர்ரன் என்ற தனியார் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலக பணக்காரர் பட்டியல், ஆசிய பணக்காரர்கள் பட்டியல் என பல்வேறு பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது

அந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் ஒரே ஒரு இந்தியர் மட்டுமே உள்ளார் என்பதும் அவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த பட்டியலில் உள்ள முதல் 10 இடங்களில் உள்ள உலக பணக்காரர்களின் பட்டியல் இதோ:

1. எலான் மஸ்க் – 205 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து

2. ஜெஃப் பெஜாஸ் – 188 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து

3. பெர்னார்டு அர்னால்ட் – 153 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து

4. பில்கேட்ஸ் – 124 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து

5. வார்ரன் பஃபெட் – 119 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து

6. லேரி பேஜ் – 116 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து

7. செர்ஜி பிரின் – 116 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து

8. ஸ்டீவ் பால்பர் – 107 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து

9. முகேஷ் அம்பானி – 103 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து

10. பெர்ட்ராண்ட் பியூச்- 102 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து

இந்த பட்டியலில் அதானி 12வது இடத்திலும் பேஸ்புக் நிறுவனர் மார்க் 14-வது இடத்திலும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

 

Trending

Exit mobile version