தமிழ்நாடு

தடுப்பூசியால் நடிகர் விவேக் மரணமா? தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை

Published

on

பிரபல நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி திடீரென மாரடைப்பு காரணமாக காலமான நிலையில் அதற்கு முன்னர் இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் அவர் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தி இருந்தார் என்பதால் இது குறித்து வதந்திகள் பரவியது.

ஆனால் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தியதற்கும் விவேக் மரணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி கூறியது. இந்த நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் தடுப்பூசி செலுத்தியதால் தான் மரணமடைந்தார் என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு கடந்த சில நாட்களாக கவனிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது இது குறித்த விசாரணைக்கு தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விவேக் மரணம் தொடர்பான புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதாகவும் விரைவில் இது குறித்த விசாரணை தொடங்கும் என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விவேக் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் தற்போது அது குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விவேக்கிற்கு வந்த மாரடைப்புக்கும் அவர் செலுத்தி கொண்ட கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பு உண்டா? என்பது விசாரணையின் முடிவில் தான் தெரிய வரும்.

seithichurul

Trending

Exit mobile version