சினிமா செய்திகள்

வலிமை’ ரிலீஸ் தினத்தில் 5 முறை படம் பார்த்த ரசிகர்: ஹூமா குரேஷி பாராட்டு!

Published

on

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் கடந்த 24ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படத்திற்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனங்களையும் மீறி இந்த படம் அபார வசூல் செய்து வருகிறது.

100 ஆண்டு சினிமா வரலாற்றில் 900 திரையரங்குகளில் ரிலீசான இப்படம் முதல் நாளில் சாதனை வசூல் செய்தது என்பதும் இரண்டாவது நாளும் மூன்றாவது நாளிலும் மிகப்பெரிய வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் தற்போது 14 நிமிடங்கள் வரை ’வலிமை’ ட்ரிம் செய்யப்பட்டுள்ளதால் கூடுதல் விறுவிறுப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை கிரெளன் பிளாசா என்ற இடத்தில் பணிபுரியும் குமார் என்பவர் ’வலிமை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் ஐந்து முறை படம் பார்த்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது .

இதனை அடுத்து அந்த ரசிகரின் புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள ’வலிமை’ படத்தின் நாயகி ஹூமா குரேஷி, அவருக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார். ஹூமாவின் இந்த ட்விட் தற்போது வைரலாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version