சினிமா செய்திகள்

அஜித்தின் ’வலிமை’ ரிலீஸ்: சென்னையில் படம் பார்த்த படக்குழுவினர்!

Published

on

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் முழு தமிழகம் உள்பட உலகம் முழுவதும் இன்று ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் சென்னையில் இந்த படத்தை ’வலிமை’ படக்குழுவினர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் புரோமோஷன் செய்யப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் முதல் காட்சி இன்று அதிகாலை 4 மணிக்கு சென்னையில் உள்ள ரோஹினி திரையரங்குகளில் திரையிடப் பட்டன. சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் ’வலிமை’ படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், நாயகி ஹூமா குரேஷி, வில்லன் கார்த்திகேயா மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அஜித் ரசிகர்களின் ஆரவாரத்துடன் படக்குழுவினர் படம் பார்த்து ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சென்னையில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் திரையுலக பிரபலங்கள் பலர் இந்த படத்தை பார்த்து வருகிறார்கள் என்பதும் விரைவில் அவர்களுடைய இந்த படம் குறித்த கருத்துக்கள் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version