சினிமா செய்திகள்

அஜித் படத்தில் மீண்டும் இணையும் ஹூமா குரேஷி: எந்த படத்தில் தெரியுமா?

Published

on

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வசூலைப் பெற்றது என்பதும் ரூ.200 கோடிக்கும் அதிகமாக இந்த படத்தின் மொத்த வசூல் என சமீபத்தில் தகவல் வெளிவந்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது ’வலிமை’ படத்தில் நடித்த ஹூமா குரேஷி, மீண்டும் அஜித் படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் தற்போது நடித்து கொண்டிருக்கும் ‘அஜித் 61’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அவர் நடிக்கயிருக்கும் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருக்கிறார் என்பதை பார்த்தோம் .

மேலும் இந்த படத்தில் நயன்தாராதான் நாயகி என்று கூறப்பட்ட நிலையில் ஹூமா குரேஷி முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது .

‘வலிமை’ படத்தில் அஜித்துக்கு உற்ற துணையாக மிக முக்கிய கேரக்டரில் நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற ஹூமா, மீண்டும் அஜித்துடன் நடிக்க இருப்பது இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் யார் யாரெல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version