தொழில்நுட்பம்

ஹுவாய் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.!

Published

on

அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த 3 கேமரா கொண்ட ஹுவாய் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஹுவாய் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட் போன் 3 “குவாட்ரண்ட் கேமரா” சேவையுடனும், அதிவேக ஹிசிலிகோன் கிரீன் 980 சிப்செட்டுடனும் இன்று அறிமுகம் செய்யப்படும் என்று ஹுவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புது ஹுவாய் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட் போன் இல் நியூரல் பிராஸஸிங் யூனிட் மற்றும் ஏ.ஐ சேவையும் இணைக்கப்பட்டுள்ளது.

குவாட்ரண்ட் கேமரா சேவையுடன் இந்த ஆண்டில் வெளிவரும் வயர்லெஸ் சார்ஜிங் ஸ்மார்ட்போன் ஹுவாய் மேட் 20 ப்ரோ என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் வெளியிடப்பட்ட ஹுவாய் மேட் பி20 ப்ரோ ஸ்மார்ட் போன் இன் வெற்றியைத் தொடர்ந்து இந்த ஹுவாய் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்படுகிறது.

ஹுவாய் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் இன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.88,400 க்கு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ஹுவாய் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட் போன் இன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு கொண்ட வேரியண்ட் மாடலும் அறிமுகம் செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் தளத்தில் ஹுவாய் மேட் 20 ப்ரோவின் விற்பனை விரைவில் துவங்குமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version