சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி போல் மாறும் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன்..!- புது பட அறிவிப்பு!

Published

on

நடிகர் விஜய் சேதுபதி – மாதவன் கூட்டணியில் வெளியாகி தமிழில் பெரும் ஹிட அடித்தத் திரைப்படம் விக்ரம் வேதா.

இத்திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்-கான படப்ப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த வேதா கதாபாத்திரத்தில் ஹிந்தியில் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் நடிக்கிறார். அதே போல் நடிகர் மாதவன் நடித்த விக்ரம் கதாபாத்திரத்தில் நடிகர் சயீஃப் அலிகான் நடிக்கிறார்.

ஹ்ரித்திக் ரோஷன் - சயீஃப் அலிகான்

முதலில் விஜய் சேதுபதியின் வேதா கதாபாத்திரத்தில் நடிகர் அமீர்கான் நடிப்பதாக இருந்தது. தற்போது அது மாறி ஹ்ரித்திக் ரோஷன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்தப் படத்தையும் தமிழில் இயக்கிய இயக்குநர்கள் தம்பதியர் புஷ்கர்- காயத்ரி இயக்குகின்றனர். இத்திரைப்படம் ஹிந்தி மொழியிலும் ஹிட் அடிக்குமா என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Trending

Exit mobile version