சினிமா செய்திகள்
ஹிரித்திக் ரோஷனுக்கு இந்த படமாவது கை கொடுக்குமா?
பாலிவுட்டின் கான் நடிகர்களுக்கு அடுத்தபடியாக ரித்திக் ரோஷன் முன்னணியில் இருந்து வந்தார். சில நேரங்களில் கான் நடிகர்களுக்கு கடும் டஃப் கொடுத்து வந்த ரித்திக் ரோஷனுக்கு சில ஆண்டுகளாக சரியான படம் அமையவில்லை. பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மொஹஞ்சதாரோ படம் படுதோல்வியை சந்தித்ததால் கடும் அப்செட்டுக்கு உள்ளானார் ரித்திக் ரோஷன்.
இந்நிலையில், அவர் நடிப்பில் உருவாகியுள்ள சூப்பர் 30 படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.
இந்த படத்தின் டிரைலர் நாளை மறுநாள் ஜூன் 4ம் தேதி வெளியிடப்படும் என்ற அறிவிப்பை சற்று முன்னர் ட்விட்டரில் ஹிரித்திக் ரோஷன் வெளியிட அந்த செய்தியை அவரது ரசிகர்கள் ட்விட்டர் டிரெண்டாக்கி உள்ளனர்.
பள்ளி மாணவர்களுடன் மழையில் ஆட்டம் போடும் காட்சியுடன், போஸ்டரில் கணித ஃபார்முலாக்களும் இருப்பதால், இந்த படம் நல்ல கணித ஆசிரியரின் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.