தொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் ‘நமக்கு நாமே’ தகவல் அனுப்புவது எப்படி?

Published

on

உலகின் மிகப் பெரிய தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப் உருவாகியுள்ளது.

வாட்ஸ்அப் மூலமாக விடியோக்கள், புகைப்படங்கள், கோப்புகள் போன்றவற்றை நொடிப் பொழுதில் பகிர முடியும்.

இப்படி பலவேறு வசதிகள் இருந்தால் வாட்ஸ்அப் செயலியில் நமக்கு நாமே தகவல்களைப் பரிமாற முடியாமல் இருந்து வந்தது. எனவே சிலர் குழுக்கள் உருவாக்கி அதில் தங்களுக்குத் தேவையான தகவல்களை பகிர்ந்து வந்தனர்.

பலர் போன்களில் வரும் எஸ்எம்எஸ் மூலமாக மட்டும் தங்களுக்குத் தாங்களாகவே தகவல்களை பரிமாறிக்கொண்டு வந்தனர். சிலர் ஜிமெயில் மூலம் தங்களுக்கு தாங்களே தகவல்களை பரிமாரி வந்தனர்.

இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியில் நமக்கு நாமே தகவல்களை பரிமாறிக்கொள்ளும் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் செயலியில் நமக்கு நாமே தகவல் அனுப்புவது எப்படி என விளக்கமாகப் பார்க்கலாம்:

படி 1: உங்கள் போனில் வாட்ஸ்அப் செயலியைத் திறக்கவும்.
படி 2: வாட்ஸ்அப் செயலியின் கீழே மூலையில் உள்ள புதிய சாட் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
படி 3: உங்கள் தொடர்பு எண்கள் காண்பிக்கப்படும். அதில் உங்கள் எண்ணைத் தேர்வு செய்து தகவல்களை நமக்கு நாமே அணுப்புலாம்.

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த நமக்கு நாமே தகவல் பரிமாறும் சேவை மூலமாக, பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் நேரம் அதிகரிக்கும். புதிய பயனர்களையும் கவர முடியும்.

Trending

Exit mobile version