பல்சுவை

குப்பையில் கொட்டும் வெங்காயத் தோலை இயற்கை உரமாக மாற்றுவது எப்படி?

Published

on

நாம் வீட்டில் தினமும் உணவுக்குப் பயன்படுத்தும் வெங்காயத் தோலைக் குப்பையில் போட்டு விடுவோம். வெங்காயத் தோலில் பொட்டாசியம், இரும்பு, கால்சியம், மெக்னீசியம் மற்றும் தாமிரம் உள்ளிட்ட தாத்துக்கள் உள்ளன.

எனவே வீணாகக் குப்பையில் கொட்டும் இந்த வெங்காயத் தொலை எளிமையாக உரமாக மாற்றுவது எப்படி என இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

1) உங்கள் கை நிறைய வெங்காயத் தோலை எடுத்துக்கொள்ளவும்.
2) அதை ஒரு டப்பாவில் போட்டு, தண்ணீர் ஊற்றவும்.
3) வெங்காயத் தோலைத் தண்ணீரில் நன்றாக கலந்து, 24 மணி நேரத்துக்கு மூடிவிட வேண்டும்.
4) பின்னர் அந்த தண்ணீரை எடுத்து செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தலாம்.

வெங்காயத் தோலில் உள்ள பொட்டாசியம் செடிகள் நன்றாக வளர உதவும். வீட்டின் உள்ளே அல்லது வெளியே என எல்லா செடிகளுக்கு இந்த உரத்தைப் பயன்படுத்தலாம்.

வெங்காயத் தோலை மாதத்திற்கு 3 அல்லது 4 முறை வரை உரமாகப் பயன்படுத்தலாம்.

வெங்காயத் தோல் மட்டுமல்லாமல் பூண்டு தோலும் இப்படி உரமாக மாற்றிப் பயன்படுத்தலாம்.

Trending

Exit mobile version